Pages

Wednesday, 17 February 2021

எங்கே

அகம் எங்கே ,

 மனம் எங்கே , 

மனிதனின் உயிர் குணம் எங்கே? 


உயிர் காக்க உதவிடும்,   

உண்மை என்றே உலவிடும் , 

ஒன்று போல நின்று தந்த, 

பாசம் எங்கே , 

பாடல் எங்கே? 


நேற்று கொண்ட ஈரம் எங்கே , 

இன்று கண்ட காலை எங்கே , 

நாளை என்றது வாழ்த்து என்றே , 

வாழ்வதெங்கே , 

வார்த்தை எங்கே? 


அறம் எங்கே , 

மரம் எங்கே ,  

மனிதனின் குதுகலம் எங்கே? 


மாற்றம் தந்த ஏமாற்றவும் , 

மழை சிந்தின மூட்டவும், 

ஒன்று போல நின்றிடாத 

அந்த நேரம் எங்கே , 

வான நீலம் எங்கே?


பிரணவம் ரவிகுமார்

Monday, 15 February 2021

காதல் தருணம்

 மெல்லிய தென்றல்

 மழை ஈரம் , 

ஒளிரும் நிலவு , 

பூக்கும் கவனம் , 

திறந்த மனது , 

தெளிந்த உறவு , 

மறந்த கண்ணீர்

 இணைந்த மாற்றம் ,

 பிறந்த பாடல் , 

இசையும் நடனம் , 

 காதல் தருணம்

இது பரிமாறும் பயணம் !!

Monday, 28 September 2020

நினைவு

 நிலவு பாடலின் 

நினைவு காலம்

 நீண்ட பாடலின் 

நிகழ்வு தூரம் 

காதல் கொண்ட வானம் 

கண்ணீர் கொண்டது 

உன் மூச்சை தந்த நேரம் 

காற்றும் கலைந்தது 

கற்றவன் கடந்து போனான் 

பெற்றவன் புலம்பி நின்றான்!!

Sunday, 23 August 2020

மழை வானமே!

 ஒவ்வொரு மழையும்,

ஒரு விசித்திரக் கதையைத் தருகிறது

இருட்டில் இருங்கள், 

அல்லது ஆழமான வெளிச்சத்தில்;

நினைவூட்டல்களில் தாளங்கள்!


ஒரு குறுகிய நேரம்,

என் இளமை பருவத்தில்,

மகிழ்ச்சியின் எளிமை

ஒவ்வொரு நடைப்பயணத்திலும்,

இதயங்களுக்கு இடையிலான 

குறுநடை போடும் பாதைகளில்,

குளிர்காலம் ஊறவைக்கிறது!


 நீண்ட நேரம் எடுத்து எழுதின,

குறிப்புகளை அனுப்ப,

விழும் சொட்டுகளுடன்

மீண்டும் பல முறை எழுதப்பட்டது,

ஆனால் இடுகையிடப்பட்ட தருணம்

அப்போது விடை சொன்னது !


சூரியன் உள்நுழையும்போது,

பிறந்தது பொன் வானம், 

வானவில்லுக்கான நம்பிக்கையை,  எடுக்கவில்லை,

 இப்போது குறைந்தது,

நகரும் மேகங்களுடன்,

உங்களுக்கு அறிவிக்கட்டும்,

 மழைவானமே உன்னை நான்

எல்லா நேரத்திலும் நேசித்தேன்!

Sunday, 21 June 2020

காதல் கொண்டதே

காதல் கதைகள், 
இந்த காலம் கை தந்தது!

 நீ காணும் கனவை
என் காதோடு தான் தந்தது!

உன் நினைவோ
தினம் மலரும்
புது பயணம்
மனம் வாழும்

இந்த மேகங்கள் மழையாக பொழிகின்றதே

சில நேரங்கள் நேற்றென்று முடிகின்றதே ,

காதல் கொண்டதே , இந்த கவிதை தந்ததே!

காதல் கொண்டதே , இந்த கவிதை தந்ததே!

Thursday, 30 April 2020

உன்னதன்

உண்மையில் உகந்தவன்
ஊருக்காக உழைப்பவன்
உறவுகளை மதிப்பவன்
உணவை பகிர்ந்தவன்
உழைப்பில்  நின்றவன்
உயிர் குணம் கொண்டவன்
உயர்ந்த உணர்வில்     
உறுதி தருபவன்
உன்னதன் அவனே!!

Saturday, 29 June 2013

ஈரம்

கண்ணின் 'ஈரம்'
அது காத்திருந்த கதை 
கைகூடும் ஒரு கணம்.
காதல் கொண்டதோ,
கவலையில் ஆழ்ந்ததோ 
கரைதான் மாறி சென்றதோ?
இனியோர் கனவுக்காய்,
காத்திருப்போம்!!!

Monday, 25 July 2011

உறவு

மருத்துவம் தேவை!
உயிருக்கல்ல,
தேவையில்லை உடலுக்கும்.

"உற்றவர் உயிர் ஊசலாட"
அதை உண்ர்ந்தும்
உடையாமல் உள்ள
உள்ளங்களுக்கு ,
மருத்துவம் தேவை!

உணவு இல்லை,
அணிய உடையுமில்லை
அன்று உயிர் வாழ்ந்தது உறவுக்கே.

இன்று உற்வுமில்லை,
இருந்தால் அதில் உயிருமில்லை,
உடன் பிறப்பும் ஊமை போல...

மனக்கவலை!!!
சிரிப்பு ஓர் மருந்து,
அதுவும் இங்கே
சிந்தனைக்கும் சிக்காத பொக்கிஷம்!

உண்மை வரம்பாகுமோ,
உடன் வளருமோ,
உறவுகள் இங்கே?

உணர்ந்து உதயம் செய்தால்,
உயிர் வளம் பெரும்,

இல்லை ,அழிவோம்,

இம்மருத்துவம் பயனின்றி,
உயிர் குணம் பெறாமல்
இந்த உடலுடன்!!!

Tuesday, 5 July 2011

நிலவு

ஒரு பாடல் பாடவா
புது கதையாய் கூறவா,
காட்றில் கலந்தாடும்
என் காதல் கவிதையய்!

எழுதிய வரிகள் எத்தனய்,
வழிகள் கடந்து சிந்தனை;
மனமுடயாமல் நின்று
தாந்கிய வலிகள் எத்த்னய்?

தனிமை என் வரம்
உன் நினைவு தரும் சுகம்,
நிழலாய் தவிழும் இது
ஒரு மழைக்காவியம்!

இறவின் புது வரம்,
மனமிடயில் ஏதோ ஸ்வரம்,
இசையுடன் குதுகலம் கூடி-
-வந்த காதல் நிலவிதோ?

காட்றில் இசை கண்ட இக்கவிதை,
வரிகளாய், வழிகளாய்,
வலியாய், வரமாய்,
மழயாய், புது சுகமாய்,
என் உள்ளே நின்று வந்தது,

ஒரு காதல் நிலவாய்!!!

Wednesday, 8 June 2011

மழை

கண்மூடி வரும் காதலோ,
இது கனவின் கலையோ?
மனம் கண்ட காரணம்
ஒரு காதல் கதையோ?

வானம் வெட்டி விரிய
சிறு தூறல் போடுதோ?
இந்த மழையிலும் இங்கு
ஓர் ரோஜா மலருதோ?

மன்மதக் காதல் கவிதைகள்
மழையில் நனையுதோ?
புதுப் பாடலாய் வடிய
அது கரை தேடுதோ?

பாடல் பாடியே பறவைகள்
சுத்தி வட்டமிடுதோ?
இந்த மழை,
ஒரு காதல் கலையோ,

மனம் நிறைபெரும்
காதல் மழையோ?