Pages

Monday 28 February 2011

காகித எழுத்து

கனவுகள் எத்தனை கண்டேன்..
காத்து நின்றேன் கடைசிவரை
கலைந்து போன என் நிலவே,
நீ காட்சி தராதது ஏனோ ?


மலர்ந்த மொட்டுக்கள்,
மாலையில் தென்றல்
மாற்றம்தருமே மனதில்!!


பூத்து வருகிற -இந்த
புதுநிகழ்வும் ஒரு சுகம்!


நீ வராத பொழுதினில் ,
நெஞ்சில் ஏதோ ஏக்கம்!
நீடிக்கிறது துடிப்பு,
நீங்காத ஒரு நேசம்!!


மனமே இதுதான் காதலோ?
காட்சி தராமல் கலைந்த
கனவின் காகிதஎழுத்து!


இந்த காதல்,
சில கனவுகளின்


காகிதஎழுத்து!

Tuesday 22 February 2011

"க" ....கிடைத்த கவிதை !!

காற்றோடு கதை சொல்ல
காத்திருந்தாள்....!

காதலுக்காய் கனவிலும்-இன்று
காவியம் கண்டாள்!!!


டிதம் எழுதினாள்!
தையாய்-அவள் கனவை!

காட்சி தந்தாள்,
ண்களுக்கு கனியமுதாய்!!


காலைப்பொழுதில்
விதை தந்தாள்,

காவியபாஷையில்-அவனிடம்
காதல் சொன்னாள்..!


காதினில் குயிலாக பாடினாள்!
வலையில் கண்ணீரும் கொண்டாள்!!

ண்ணனையே
ணவனாகக் கண்டாள்!!

டைசிவரை...
டலின் அலை போலே காதலுடன்..

காத்திருந்தாள்...!!!


காதலுக்காகவே என்றும்!

Sunday 13 February 2011

காதல் துளிகள்

பூவின் மகளே!!
என் தோளில்
நீ சாய்ந்ததாலே
பனிமழையாய்-இன்று
நான் நனைகின்றேன் ..!!


இது கனவல்ல நிஜமா?-உன்
நினைவு தந்த காதல் வரமா?
இனி நான் உனதேயானால்
நம் உறவினி சுகமா?


வானின் மேலுலகம் நமதே,
நிலவு வசதிகள் தரவே..
நீ வருவாயா-என் காதல்நிலவே
இனிதாய் நாம் வாழ்ந்திடவே???


அமுதே..

உன் கால்கள் இன்று காட்டுதே-
என் கண்களுக்கு பல
ஓவிய கலைகள் !!
கைகள் தந்ததோ என்றுமே
காவிய துளிகள்.!!
கண்களில் காணும் சில
காதல் கதைகள்...!


உள்ளம் கூறும் உண்மைகள்
என் வலிகளாய்...
உள்ளே தோன்றும் உறவுகள்
என் வடுக்களாய் ...


உண்மை மீண்டும் சொல்கின்றேன் -உயிரே
இன்னும் உன்னில் உரிமை
உள்ளதென்று எண்ணி எண்ணியே
உயிர் வாழ்கின்றேன் ...!

Tuesday 8 February 2011

ஓர் நாள் வரும்

காலம் மாறியது... என் கவலையல்ல ,
அதற்கு ஓர் நாளும் அழுததில்லை!
விடை தேடி எங்கும் அலைந்ததில்லை -என்
விடாமுயற்சி கைவிட்டு போகவும் இல்லை !!.


நினைத்த லட்சியம் -என்
நீண்ட நாள் ஆசை,
எதிர் நீச்சலில்-அது
என்றும் கேட்டிடாத ஓசை!!


காத்திருந்தால் காயமா?
அதற்காக இந்த வாழ்க்கை
ஓர் துயரமா?
ஆசை மறப்பது நியாயமா?
கண்களின் ஈரம்
கனவை ஒதுக்குமா?


வார்த்தையில் ஏன் வன்முறை ??
வாழ்க்கையில் ஏன் இந்த வாட்டம்?

மலரில் பரவும் அதன் வாசம்,
உயிர் பிரிந்தாலும் என்றும் வீசும்!!

மலரை படைத்தவன்-அவனே
மனமும் படைத்தான்- என்
மனதில் மலர்ந்திடும் மாற்றங்கள்
முகவரி அறியாமல் மூழ்கிடுமோ என்ன?

மீண்டு(ம்) -எனக்கு

ஓர் நாள் வரும்...!!!

Tuesday 1 February 2011

விதி

கண்கள் பேசாவிட்டாலும்
உன் கவிதை அன்று பேசியதே
என் மனதில் நீ தெரிய,
உன் முகம் எனக்கு தேவயா?

இரவை மறந்த சந்திரனை
இம்மனம் தேடுவதேனோ,
அது விதியா, அல்ல
அது தான் வாழ்வின் வழியா?

விதியின் ஏமாட்ரம்,
வாழ்வில் விளயாட்டம்
வந்து விட்டது இன்று,
வாழ்வில் பனிமூட்டம்
வாழாத நம் வாழ்கை
மனதில் நிலைனாட்ரும்
உயிர் பிறிந்தாலும்
நம் காதல் வரலாட்ரம்.

ஏன் தெரியுமா?

பிரிவு இன்று நீ ச்வாசித்த மூச்சு,
ஆனால் உன் நினைவு
என்றுமே நிலைக்காத பேச்சு!
அது எனக்கு நிலைக்காத பேச்சு!