Pages

Monday, 28 February 2011

காகித எழுத்து

கனவுகள் எத்தனை கண்டேன்..
காத்து நின்றேன் கடைசிவரை
கலைந்து போன என் நிலவே,
நீ காட்சி தராதது ஏனோ ?


மலர்ந்த மொட்டுக்கள்,
மாலையில் தென்றல்
மாற்றம்தருமே மனதில்!!


பூத்து வருகிற -இந்த
புதுநிகழ்வும் ஒரு சுகம்!


நீ வராத பொழுதினில் ,
நெஞ்சில் ஏதோ ஏக்கம்!
நீடிக்கிறது துடிப்பு,
நீங்காத ஒரு நேசம்!!


மனமே இதுதான் காதலோ?
காட்சி தராமல் கலைந்த
கனவின் காகிதஎழுத்து!


இந்த காதல்,
சில கனவுகளின்


காகிதஎழுத்து!

21 comments:

Asiya Omar said...

காதல் வந்தால் கவிதையும் தானாக வரும்.நல்லாயிருக்கு.

Pranavam Ravikumar said...

@Asiya Omar: Thanks for your visit. Actually I am thinking, atleast seeing this any one will come...Lets see... :-)

ஸாதிகா said...

கவிதை அருமை

Chitra said...

அருமையான கவிதைங்க... பாராட்டுக்கள்!

zephyr zia said...

:)

ஹேமா said...

காகிதத்தில் எழுதியபடியால் பாதுகாத்து வையுங்கள்.அழியாத காதலாகும் !

சென்னை பித்தன் said...

இந்தக் காதலே இப்படித்தான்!
நன்று!

சி.பி.செந்தில்குமார் said...

வல்லிய கவித

Thenammai Lakshmanan said...

காகித எழுத்து அழகு..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை

இராஜராஜேஸ்வரி said...

காட்சி தராமல் கலைந்த
கனவின் காகிதஎழுத்து!
அருமையான வரிகள்.
பாராட்டுக்கள்!

Jeevan said...

Nandru!

தாராபுரத்தான் said...

காட்சி தராமல் கலைந்த
கனவின் காகிதஎழுத்து!
உண்மை..

ரிஷபன் said...

காகித எழுத்து மணக்கிறது நிஜமான உணர்வுகளின் அருமையால்.

குறையொன்றுமில்லை. said...

உள்ளத்து உணர்வுகளை அழ்காக கவிதையில் சொல்லியிருக்கீங்க. இன்றுதான் உங்க பக்கம் வ ந்தேன்.

Pranavam Ravikumar said...

Thanks for all, for your visit and wishes...! Appreciate your visit again and encouragement. Have a great day to all!

இராஜராஜேஸ்வரி said...

பூத்து வருகிற -இந்த
புதுநிகழ்வும் ஒரு சுகம்!//
கவிதையும் ஒரு சுகம்.

Anonymous said...

காட்சி தராமல் கலைந்த
கனவின் காகிதஎழுத்து!


Go ahead...

goma said...

கலைந்தால் அது காதல் அல்ல.நிலைத்தால் நீங்கள் எழுதியது காகிதத்தில் அல்ல ,கல்லில் செதுக்கியிருப்பீர்கள்.

മേല്‍പ്പത്തൂരാന്‍ said...

காட்சி தராத காதல் .....அருமையாயிக்கு ..!

Abdul malik said...

"உற்றவர் உயிர் ஊசலாட"
அதை உண்ர்ந்தும்
உடையாமல் உள்ள
உள்ளங்களுக்கு ,
மருத்துவம் தேவை!

really true words...