Pages

Saturday, 29 June 2013

ஈரம்

கண்ணின் 'ஈரம்'
அது காத்திருந்த கதை 
கைகூடும் ஒரு கணம்.
காதல் கொண்டதோ,
கவலையில் ஆழ்ந்ததோ 
கரைதான் மாறி சென்றதோ?
இனியோர் கனவுக்காய்,
காத்திருப்போம்!!!

Monday, 25 July 2011

உறவு

மருத்துவம் தேவை!
உயிருக்கல்ல,
தேவையில்லை உடலுக்கும்.

"உற்றவர் உயிர் ஊசலாட"
அதை உண்ர்ந்தும்
உடையாமல் உள்ள
உள்ளங்களுக்கு ,
மருத்துவம் தேவை!

உணவு இல்லை,
அணிய உடையுமில்லை
அன்று உயிர் வாழ்ந்தது உறவுக்கே.

இன்று உற்வுமில்லை,
இருந்தால் அதில் உயிருமில்லை,
உடன் பிறப்பும் ஊமை போல...

மனக்கவலை!!!
சிரிப்பு ஓர் மருந்து,
அதுவும் இங்கே
சிந்தனைக்கும் சிக்காத பொக்கிஷம்!

உண்மை வரம்பாகுமோ,
உடன் வளருமோ,
உறவுகள் இங்கே?

உணர்ந்து உதயம் செய்தால்,
உயிர் வளம் பெரும்,

இல்லை ,அழிவோம்,

இம்மருத்துவம் பயனின்றி,
உயிர் குணம் பெறாமல்
இந்த உடலுடன்!!!

Tuesday, 5 July 2011

நிலவு

ஒரு பாடல் பாடவா
புது கதையாய் கூறவா,
காட்றில் கலந்தாடும்
என் காதல் கவிதையய்!

எழுதிய வரிகள் எத்தனய்,
வழிகள் கடந்து சிந்தனை;
மனமுடயாமல் நின்று
தாந்கிய வலிகள் எத்த்னய்?

தனிமை என் வரம்
உன் நினைவு தரும் சுகம்,
நிழலாய் தவிழும் இது
ஒரு மழைக்காவியம்!

இறவின் புது வரம்,
மனமிடயில் ஏதோ ஸ்வரம்,
இசையுடன் குதுகலம் கூடி-
-வந்த காதல் நிலவிதோ?

காட்றில் இசை கண்ட இக்கவிதை,
வரிகளாய், வழிகளாய்,
வலியாய், வரமாய்,
மழயாய், புது சுகமாய்,
என் உள்ளே நின்று வந்தது,

ஒரு காதல் நிலவாய்!!!

Wednesday, 8 June 2011

மழை

கண்மூடி வரும் காதலோ,
இது கனவின் கலையோ?
மனம் கண்ட காரணம்
ஒரு காதல் கதையோ?

வானம் வெட்டி விரிய
சிறு தூறல் போடுதோ?
இந்த மழையிலும் இங்கு
ஓர் ரோஜா மலருதோ?

மன்மதக் காதல் கவிதைகள்
மழையில் நனையுதோ?
புதுப் பாடலாய் வடிய
அது கரை தேடுதோ?

பாடல் பாடியே பறவைகள்
சுத்தி வட்டமிடுதோ?
இந்த மழை,
ஒரு காதல் கலையோ,

மனம் நிறைபெரும்
காதல் மழையோ?

Thursday, 14 April 2011

அறிவு

'அறிவே வரம்!'
இதை புரிந்து
அடங்கி இருந்தவனை
ஆட்டிப் படைக்க,
அமைதியை உடைக்கும்
சிலநேர புயல்!

அறிவுடன் வந்தவர்-சிலரே
அவரை அல்லல்படுத்தும்
அடங்காபிடாரிகள்-பலரே..!

இக்காரண்ம் அறியாமல் கவலை
இனி குறையுமோ ?
இல்லை காலம் மாறினாலும்
இது தொடருமோ ?

பதில் சொல்ல முடியாமல்
பிரமிக்கிறது காலம்;
விடை தேடி கிடைக்காமல்
கனவு கொண்ட சில மனமும் .

இறுதியில் என்ன?

நின்று அறிவோம்!!
காலத்தின் பதிலை
கண்டறிவோம்..
கனவுகளின் விடையை!!

Sunday, 3 April 2011

எதிரொளி

நாடகம் முடியும் இன்னாளில்
எங்கேயோ எதிரொளி!
ஏங்கிவிட்டான்.

நாளைய பொழுது இனி
நிச்சயமில்லை
பின்பு தேடலெதற்கு?

"வாய்ப்பு வளர்க்க வேண்டாம்"
வாசித்தார் ஒருவர் -அவன்
வாழ்க்கை பத்திரம்.

இறுதியில் கேள்வி எழுந்தது,
"ஏதாவது சொல்ல...?"
கண் சிமிட்டி 'கடவுளே' என்றான்.

தண்டனை தெரியுமா?
‘தூக்கு நிச்சயம்’
ஆரம்பம் கண்டவரே அசந்தார்!

கூச்சல் போட்டாலும் கேட்பாறோ?
எனவே எழுதியது ஏற்று
‘ஆம்’, என்றான்.

கேட்டதை கண்டு காலம் முடித்தார்.
இவர் கேட்காது போவது,
இதுபோல் எத்தனயோ?

தூக்கு மரம் நாளாய் நெருங்கும்
இவனுக்கும் கனவுண்டு,
தீராத சில கனவு!

Monday, 21 March 2011

காதல் அலை

கடலலை, அது
கரை சேரா அலை,
காதலர்களுக்கு,
நிறைவு தரும் பிறை.
கனவில் இன்று-
ஒழுகும் காவிய கலை,
கண்களுக்கு,
அவளொரு காதல் சிலை.

நேற்று முன்தினம் வந்ததோ
காதல் மழை,
இன்று மாலையில் ஒரு-
விழாக் கோலம் தரும் நிலை.
இல்லை வாழ்வில்,
இனி மனக்கவலை,
இந்த காதல்
என்பதே ஒரு காலமுறை!

உயிர் வாழும்-
சில உறவின் வலை,
அவள் உறவு தருமே
வாழ்வின் விடை.
தேடியலைவேன் நான்,
அவள் நிழலை.
மனமே உடயளியும்
இது காதல் அலை.

மனமே உடயளியும்,
இது காதல் அலை

Thursday, 17 March 2011

வாழ்கை

வார்த்தைகள் வாயில் வழியும் - சில
வாழ்க்கை இன்று வேதனை அடையும்,
வேர்படும் அன்பு நெஞ்சம்,
வீண்படும் வண்ண நிலவுகள் கொஞ்சம்.

வெயில் விலகும், நிழல் மறையும்,
இங்கு நடக்கிற இவ்வாழ்க்கை, நாடகம்.
எது நிரந்திரம் சொல்லு?
உணர்ச்சிகள் உயிறெடுப்பதே நிஜம்.

ஆவல் கொண்டிருப்பவன் வாழ்வில்
என்றும் தாளம் போடுவதென்ன?
கவலையும் அதன் கசப்பும்,
தேவையின்றி தேடி வரும் வெறுப்பும்!

இந்த அழிவு முடிவதில்லை,
முடிந்ததோ,ஒன்றுமே தெரியவில்லை,
தெரிந்தவர் மொழியவில்லை,
மொழிந்தவர் இங்கு அதிகமில்லை.

"வாய்த்ததை விரும்பு - எனில்
உன் வாழ்கை வளம்!"

Monday, 14 March 2011

அன்னையே!!

அன்னையே -நீ

கருவிலே கலந்த
கடமை கடலாய் !!
காட்சி தருவேன்-நான்
என்றுமே -உன்
பெருமை கடலாய் !


அன்னை என்று சொன்னாலே
ஒரு அருமை நிழல்!!
நெருங்கி வாழ்கிற போதிலும்
ஒரு வாடா மலர்!


நன்றி சொல்ல முடியுமா
உன் அன்புக்கு?
அதை சொல்லி நான்
வேறுபடுத்த வேண்டுமா?!


இந்த காகிதமொழிகூட
காட்சிதர காரணம் நீ!
வாழ்க்கை தூணாக நின்று
வாழ்த்தியவளும் நீ!!


வீதியிலிருந்து வீடு தந்தாய்,
வீட்டில் இருந்து வளம் புரிந்தாய்!
என் விழி துறந்து, வழிகள் காட்டி
வழி விளக்காய் நின்று வெற்றி தந்தாய்!


வாழ்கிறேன்
உனக்காகவே...

வணங்குகிறேன் -அன்னையே!
"உன் அருள் பொழிக!"

Tuesday, 8 March 2011

மனம்

சிவப்புமேகம் தவழ -அது
சாலையில் மெது ஊர்வலம்.
சில வான வேடிக்கை,
இந்நாளில் அது தரும்!

புன்னகை சிந்தும்...
பாடாத பாடல் ஒன்று,
ரீங்காரமாய்
வட்டமிட்டு பாடிடும்.

மனமே மாறி
மகிழும் இந்நேரம் ,
மௌனம் ஒலி வீசிய -
காரணமும் அது தரும் !!.

மறைந்திருந்து -அவள்
மனமந்திரம் உச்சரிக்க
மெதுவாய் அறிந்தேன்,
"அவளும் என்னை......"

தூக்கம் போனது-ஆனால்
துயரமில்லை.
நெஞ்சம் பின்பு ஒருநாளும்,
துன்பம் கண்டதில்லை.

உணர்வுகள் என்பது- இன்று
தீரா காதல் படைக்க!!
இந்த நொடி என் உயிர்
உடையாமல் இருப்பதும்
அவள் காதலுக்கே!