Pages

Tuesday 8 February 2011

ஓர் நாள் வரும்

காலம் மாறியது... என் கவலையல்ல ,
அதற்கு ஓர் நாளும் அழுததில்லை!
விடை தேடி எங்கும் அலைந்ததில்லை -என்
விடாமுயற்சி கைவிட்டு போகவும் இல்லை !!.


நினைத்த லட்சியம் -என்
நீண்ட நாள் ஆசை,
எதிர் நீச்சலில்-அது
என்றும் கேட்டிடாத ஓசை!!


காத்திருந்தால் காயமா?
அதற்காக இந்த வாழ்க்கை
ஓர் துயரமா?
ஆசை மறப்பது நியாயமா?
கண்களின் ஈரம்
கனவை ஒதுக்குமா?


வார்த்தையில் ஏன் வன்முறை ??
வாழ்க்கையில் ஏன் இந்த வாட்டம்?

மலரில் பரவும் அதன் வாசம்,
உயிர் பிரிந்தாலும் என்றும் வீசும்!!

மலரை படைத்தவன்-அவனே
மனமும் படைத்தான்- என்
மனதில் மலர்ந்திடும் மாற்றங்கள்
முகவரி அறியாமல் மூழ்கிடுமோ என்ன?

மீண்டு(ம்) -எனக்கு

ஓர் நாள் வரும்...!!!

22 comments:

Chitra said...

மலரை படைத்தவன்,

அவனே மனமும் படைத்தான்.

இந்த மனதில் மலரின் மாற்றங்கள்

முகவரி அறியாமல் முழுகிடுமா என்ன?



......மிகவும் அருமையான கருத்தும் வரிகளும். பாராட்டுக்கள்!

Pranavam Ravikumar said...

Thanks a lot Chithra Madam for your encouragement..!

Pranavam Ravikumar said...

I extend my sincere thanks to Ananthi Madam and Karthik Sir who went through my raw poem and corrected to bring this to the present form.

Appreciated your prompt response and effort took!

ஆனந்தி.. said...

//மலரில் பரவும் அதன் வாசம்,
உயிர் பிரிந்தாலும் என்றும் வீசும்!!//

Superb lines ravi...

Unknown said...

காத்திருந்தால் காயமா?
அதற்காக இந்த வாழ்க்கை
ஓர் துயரமா?
ஆசை மறப்பது நியாயமா?
கண்களின் ஈரம்
கனவை ஒதுக்குமா?////

superb... superb...

zephyr zia said...

கண்களின் ஈரம்
கனவை ஒதுக்குமா?

touching lines......

ஹேமா said...

நம்பிக்கை தரும் வார்த்தைகள்.
வாழ்வே நம்பிக்கையில்தான் ரவி.இன்னும் நிறைய எழுதுங்க.வாழ்த்துகள் !

Pranavam Ravikumar said...

Appreciate the time all of you, (Ananti, JJ, Zephyr, Hema)took to go through my work. Thank you so much..! Let me back with the next one very soon.

goma said...

எல்லா நாளும் இப்படியே போகாது
எதுவென்று அறியாமல் அலைமோதும் எண்ணங்கள் நம் கட்டுக்குள் இருத்தி எடுத்த காரியம் கைவிடாமல்இருந்தாலே,
ஏற்றம் காணும் நாள் எதிரே தோன்றுமே

Asiya Omar said...

அருமை.தொடருங்க.வாழ்த்துக்கள்.

arasan said...

நண்பரே மிகவும் ரசித்தேன் ..
தொடர்ந்து கலக்குங்க ...
வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar said...

@Goma madam: What an absolute idea that you shared!, Thank you so much for encouraging and for ur lovely words too....

@Asiya Omar Sir: Thanks for the visit and wishes.

@Arasan Sir: Very nice to know that you enjoyed my work.


Thank you so much everybody once again for the support and suggessions. I benefitted immensely from all your words. After covering close to 75 poems in malayalam through blogs and magazines, I started writing in Tamil days back.

I am sure, the published tamil poems are not the best. I will make sure my work will be better than previous.

பத்மநாபன் said...

தமிழில் எழுத இப்பொழுதுதான் ஆரம்பித்தீர்களா ... ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது ... தொடருங்கள் ..தொடர்கிறோம்

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

വെഗുമാനപ്പട്ട സൃ.കൊച്ചു രവി,

താങ്ങള്‍ എന്റെ ബ്ലോഗ്‌ -നു വന്ധധു വളര സന്തോഷമും നന്നിയും..ഗ്യാനും തന്ഗുളുടെ കവിതേ കണ്ടു... നല്ലായിട്ടുന്നട്..please visit regularly

sulekha said...

pramadam ennu parayunnilla.karanam vayikan arinjoodallo.2nd poethinte peru mizhi ennano.oohichathane.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை..மும்மொழியிலும் வல்லவரா நீங்கள்?

Muruganandan M.K. said...

"..மலரை படைத்தவன்-அவனே
மனமும் படைத்தான்.."
இனிய வரிகள் வாழ்த்துக்கள்.

priyamudanprabu said...

ஆசை மறப்பது நியாயமா?

///

nice

எல் கே said...

அருமை தொடர்ந்து எழுதுங்கள்

Aanandi said...

கவிதை இனிதாகத்தான் இருக்கிறது , எனிலும் மனம் சில பொழுத் தடுமாறுவது ஏன்? மிக மிக விருப்பத்துடன் படித்தேன். துயரத்தின் துளிகள் மனதில் இருந்தாலும் கூட, ஒப்பிட்டு பார்க்கும் பொழுது வாழ்க்கையில் இனிமையான அனுபவங்கள் தான் திகட்டுகிறது.

ரிஷபன் said...

வார்த்தைகள் அழுத்தமாய் விழுந்து முடிவில் நம்பிக்கை ஒளி..

இராஜராஜேஸ்வரி said...

மீண்டு(ம்) -எனக்கு

ஓர் நாள் வரும்...!!!/
சீக்கிரம் வர வாழ்த்துக்கள்.