Pages

Tuesday 8 March 2011

மனம்

சிவப்புமேகம் தவழ -அது
சாலையில் மெது ஊர்வலம்.
சில வான வேடிக்கை,
இந்நாளில் அது தரும்!

புன்னகை சிந்தும்...
பாடாத பாடல் ஒன்று,
ரீங்காரமாய்
வட்டமிட்டு பாடிடும்.

மனமே மாறி
மகிழும் இந்நேரம் ,
மௌனம் ஒலி வீசிய -
காரணமும் அது தரும் !!.

மறைந்திருந்து -அவள்
மனமந்திரம் உச்சரிக்க
மெதுவாய் அறிந்தேன்,
"அவளும் என்னை......"

தூக்கம் போனது-ஆனால்
துயரமில்லை.
நெஞ்சம் பின்பு ஒருநாளும்,
துன்பம் கண்டதில்லை.

உணர்வுகள் என்பது- இன்று
தீரா காதல் படைக்க!!
இந்த நொடி என் உயிர்
உடையாமல் இருப்பதும்
அவள் காதலுக்கே!

18 comments:

குறையொன்றுமில்லை. said...

பிரணவம் ரவி குமார் கவிதை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Unknown said...

பிரணவம் ததும்பும் கவிதை உங்களுடையது.

வாழ்த்துக்கள் பிரணவம் ரவி குமார்

Pranavam Ravikumar said...

@ Lakshmi:Thanks Mam!

@ Bharath Bharathi: Thanks for your wishes..! Visit again.

இராஜராஜேஸ்வரி said...

தூக்கம் போனது-ஆனால்
துயரமில்லை.
நெஞ்சம் பின்பு ஒருநாளும்,
துன்பம் கண்டதில்ல//
அழகான வரிகள்.

Pranavam Ravikumar said...

@Rajarajeshwari: Appreciate your visit & wishes!

சமுத்ரா said...

good one:)

எல் கே said...

ரவி , சிகப்பு மேகம் இதுவரை பார்த்திராத உருவகம். கவிதை நல்லா இருக்கு ரவி

சுசி said...

நல்லா இருக்குங்க.

Vel Tharma said...

அழகான வரிகள்

ஹேமா said...

சிவப்பு மேகமாய் அவளை வர்ணிப்பது அழகு.இந்தக் கவிதை 3 தடவை வாசித்தேன்.வார்த்தைகள் சுகம்.
முடிவு சுபம் !

Chitra said...

மனமே மாறி
மகிழும் இந்நேரம் ,
மௌனம் ஒலி வீசிய -
காரணமும் அது தரும் !!.


....அருமையாக எழுதுறீங்க... பாராட்டுக்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

உணர்வுகளின் வெளிப்பாடு மிகவும் அருமை... வாழ்த்துகள்....

ஆனந்தி.. said...

Nice Ravi:-))

Asiya Omar said...

கொச்சு ரவி அருமையாக எழுத ஆரம்பிச்சாச்சு.

சென்னை பித்தன் said...

இந்தக்காதல் எத்தனை வலிமையானது! கவிதை தானாகப் பெருகச் செய்து விடுகிறது~!
நன்று!

Anonymous said...

Nalla vatikal. vaalthukal.
Vetha. Elangathilakam.
Denmark.

ரிஷபன் said...

உணர்வுகள் அருமை..

ajith said...

Nice lines