Pages

Sunday 3 April 2011

எதிரொளி

நாடகம் முடியும் இன்னாளில்
எங்கேயோ எதிரொளி!
ஏங்கிவிட்டான்.

நாளைய பொழுது இனி
நிச்சயமில்லை
பின்பு தேடலெதற்கு?

"வாய்ப்பு வளர்க்க வேண்டாம்"
வாசித்தார் ஒருவர் -அவன்
வாழ்க்கை பத்திரம்.

இறுதியில் கேள்வி எழுந்தது,
"ஏதாவது சொல்ல...?"
கண் சிமிட்டி 'கடவுளே' என்றான்.

தண்டனை தெரியுமா?
‘தூக்கு நிச்சயம்’
ஆரம்பம் கண்டவரே அசந்தார்!

கூச்சல் போட்டாலும் கேட்பாறோ?
எனவே எழுதியது ஏற்று
‘ஆம்’, என்றான்.

கேட்டதை கண்டு காலம் முடித்தார்.
இவர் கேட்காது போவது,
இதுபோல் எத்தனயோ?

தூக்கு மரம் நாளாய் நெருங்கும்
இவனுக்கும் கனவுண்டு,
தீராத சில கனவு!

14 comments:

தமிழ் உதயம் said...

நாளைய பொழுது நிச்சயமில்லை என்றாலும் தேடல் எதற்கு ? அது தான் மனித மனம்.

Unknown said...

//நாளைய பொழுது இனி
நிச்சயமில்லை
பின்பு தேடலெதற்கு?
//

ஏன் வருத்தம், தயக்கம்??

நாளைகள் என்ற நம்பிக்கை தானே தேடலுக்கு அச்சாரமாய் இருக்கவேண்டும். அடுத்த கணத்தில் காத்திருக்கும் ஆச்சர்யம் தானே நம்மை நகர்த்துகிறது..???

இராஜராஜேஸ்வரி said...

இவனுக்கும் கனவுண்டு,
தீராத சில கனவு!
கனவுகள் நனவாகலாம்.

நிலாமதி said...

"நாளைகள் "நலமானதாய் மாற பிராதிப்போம். என் தளம் வருகைக்கு நன்றி

thendralsaravanan said...

நல்லாயிருக்கு கவிதை.
காலம் கடந்து கனவு காண்பவர்கள் ஏராளம். நம்பிக்கை தானே வாழ்க்கை.
வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்கின் லே அவுட் அசத்தல். கவிதை ஓக்கே

ajith said...

നാളൈ നമതേ...

Chitra said...

வித்தியாசமாக யோசித்து கவிதை எழுதி இருக்கீங்க..... :-)

SANKARALINGAM said...

தூக்கு மரம் நாளாய் நெருங்கும்
இவனுக்கும் கனவுண்டு,
தீராத சில கனவு!//
நம்பிக்கைதானே வாழ்க்கை.

ஹேமா said...

ரவி...தளம் மிக மிக அழகாயிருக்கு.

சிந்தனை அருமை.ஆனாலும் நம்பிக்கையீனமாயிருக்கு.அவர் கேட்காமல் விட்டுப்போனது நிறையவே !

”எதிரொலி” தானே சரியாயிருக்கும் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நாளைகள் "நலமானதாய் மாற பிராதிப்போம்.

vetha (kovaikkavi) said...

இவனுக்கும் கனவுண்டு,
தீராத சில கனவு..vaalthukal...

Pleas visit to my site and you can give your Karuththukal.

http://kovaikkavi.wordpress.com/
Thank you.
Vetha. Elangathilakam.
Denmark

Story Teller said...

thanks for visiting my blog and you are very good at Poetry which is a long way for me :) keep blogging and i will check your other posts for sure..

veena said...

Thank you for visting my blog.You have a great blog.